அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு

அஞ்சல்துறை தேர்வு

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அஞ்சலக தீர்வுக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தினர். பின்னர் தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் உறுதி அளித்திருந்தார்.

அஞ்சல்துறை தேர்வு

 

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த போதும் தமிழ் மொழியில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அஞ்சல் துறையில் அக்கவுண்டன்ட் பதவிகளுக்கான தேர்வு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேர்வுகளுக்கான பொது தேர்வு பட்டியலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே இடம் பெற்றிருப்பது.அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *