அமெரிக்காவில் வெளியாகி டிரம்ப் பேசும் ரகசிய ஆடியோ டேப்

டிரம்ப்

ஜார்ஜியா மாநிலத்தில் தான் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர் டிரம்ப் பேசும் ஆடியோ டேப் வெளியாகி அமெரிக்காவில் அனலை பற்றவைத்துள்ளது.
ஜார்ஜியா 11779 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடனிடம் தோற்றதால் டிரம்ப் அந்த மாநிலத்தின் தேர்தல் வாக்குகளையும் இழந்தார். இந்த நிலையில் ஜார்ஜியா மாநில அமைச்சர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசி டிரம்ப் 11780 வாக்குகளை தயார் செய்து தாம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் ஏற்பாடு செய்யுமாறு கேட்பது போன்று ஆடியோ டேப் அமெரிக்க ஊடகங்களில் வெளியானது.

டிரம்ப்

அதற்கு அந்த அமைச்சர் பிராட் ரபீஸ் பேர்கர் மறுப்பு தெரிவித்து இருப்பதும் வெளியாகியுள்ளது. ஒரு கட்டத்தில் கள்ள வாக்குகள் ஏற்பாடு செய்யவில்லை என்றால் விளைவு ஆபத்தாக இருக்கும் என டிரம்ப் மிரட்டுவது ஆடியோ டேப்பில் இடம்பெற்றுள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *