இங்கிலாந்தில் முதல் முறையாக ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உரு மாதிரி பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 196 பேருக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 830 ஆக பதிவானது. இதன் மூலம் இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76 ஆயிரத்து 305 ஆக அதிகரித்துள்ளது.