சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் பானர்ஜி இன்று பதவி ஏற்கிறார். இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த எ.பி.ஈசாக்கின் பணி காலம் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன்முடிவடைந்ததால் ஓய்வு பெற்றார். இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் பேனர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்ததற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 1862 இல் நிறுவப்பட்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐம்பதாவது தலைமைநீதிபதியாகவும் சுதந்திரத்திற்கு பிறகான 30வது தலைமை நீதிபதியாகவும் சஞ்சய் பேனர்ஜி பொறுப்பேற்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கையாக மாஸ் பயன்படுத்துவது இறுதிவரை தொடரவும் வாய்ப்புள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பாக்வார் தகவல் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு மருந்து எத்தனை காலத்திற்கு செயல்படும்
கொரோனா தடுப்பு மருந்து எத்தனை காலத்திற்கு செயல்படும் என்பதும் நோய்த்தொற்று பரவல் சங்கிலியை உடைக்க மக்கள் தொகையில் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதையும் கணக்கிடுவது சிரமம் எனக் குறிப்பிட்டார். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலமே நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் மயானத்திற்கு செல்ல வசதி இல்லாததால் விவசாய நிலத்திற்கு இடையே சடலத்தை எடுத்துச் செல்லும் அவலநிலை தொடர்கிறது. பொலிநுர் அருகே காவனிப்பாக்கம் கிராமத்தில் மயானத்திற்கு பாதைவசதி இல்லாமல் உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் பயனில்லை என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வயலில் விளையும் பயிர்களுக்கு இடையே இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் நிலை உள்ளது. இந்த அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவனப்பாக்கம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
621 கிராம் எடையிலான பசைபோல் மாற்றப்பட்டு இருந்த தங்கம்
துபாயிலேருந்து 31 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவரை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் சிறப்பு விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த அன்சாரி சம்சுதீன் மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜபல் அலி அப்துல் வகாப் ஆகிய இருவரின் செயல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 621 கிராம் எடையிலான பசைபோல் மாற்றப்பட்டு இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகே மயான மண்டபம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. நுராத் நகரத்தை சேர்ந்த ஒருவரின் இறுதிச் சடங்கின்போது மையனாம் மண்டபத்தின் மேல் கூரை இடிந்து விழுந்தது இடிபாடுகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மேலும் 6 பேர் பலியாகினர் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம்
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜனநாயகம் என்பதன் உண்மையான அர்த்தம் மக்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதுதான் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து 39 நாட்களாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சோனியா காந்தி மத்திய அரசின் கடுமையான அணுகுமுறைகளால் இதுவரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக சாடி உள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு ஆவனத்துக்கு ஓப்பபானது என்று விமர்சித்துள்ளார். ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்பது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது ஆகும் என்பதை உணர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.