சிவகங்கையில் மினி கிளினிக் திறப்பு விழா
சிவகங்கையில் மினி கிளினிக் திறப்பு விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனின் அனாகரிக செயலால் சலசலப்பு ஏற்பட்டது. முதலமைச்சரின் அம்மா மினிகிளினிக் திறப்பு நிகழ்ச்சியில் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார். விழா மேடையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணி பாஸ்கரன் பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன் அநாகரிகமாக பேசியுள்ளார். மேலும் திமுகவினர் ஒன்றுகூடி அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கஞ்சனூர் பகுதியை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமூக வலைத்தளம் மூலம் பழகிய கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து கும்பகோணம் விரைந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டதுடன் உதயகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
குற்றாலம், மணல்மேடு பகுதிகளில் கனமழை
மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு பரவலாக சாரல் மழை பெய்தது. குறிப்பாக குற்றாலம், மணல்மேடு, மங்கைநல்லூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. விபத்தை தடுக்கும் வகையில் பிரதான சாலைகளில் வாகனங்கள் மெதுவாக இயக்கப்பட்டன.
ஞ்சா கடத்தி வந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். எறையூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்துகளிலும் சோதனை செய்தனர். அதில் இருக்கையின் கீழ் மறைத்து வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். அதேபோல் மற்றொரு பேருந்தில் கஞ்சா கடத்திய நான்கு பேரை கைது செய்த போலீசார் மொத்தம் 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.