பட்டம் பார்த்து பயிர் செய் என்று சொல்வார்கள். பார்த்து பார்த்து பயிரிடப்படும் நெல் வகைகளில் எத்தனை ரகங்கள் இருக்கின்றன என்று தெரியுமா. கும்பகோணத்தில் நடந்த இயற்கை உணவு திருவிழா பற்றி பார்க்கலாம். சொத்து போல் விதையை பேனா வேண்டும் என்பது மூத்தோர் சொல். அதற்கு ஏற்ப விதைகளை விவசாயிகள் குழந்தை போல பாதுகாத்து வருகின்றனர். நாம் அன்றாட உண்ணும் அரிசிக்கள் எந்த வகை நெல்லில் இருந்து வருகிறது என்று அறிந்தவர்கள் மிக சொற்பமே. அனைவரும் இதை அறிந்து கொள்ளும் பொருட்டு கும்பகோணத்தில் நடைபெற்றது. இயற்கை உணவு திருவிழா இங்கு பாரம்பரிய உணவு பொருட்கள் மற்றும் நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு கருத்தரங்கம் நடந்தது.
இதில் கொட்டும் மழை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா, சீரகச் சம்பா, கதா சம்பா, தங்க சம்பா, ரத்தா சாலி, காட்டுயானம், சின்னார், கோம்பாவில், கருங்குருவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை பார்த்து பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். எண்ணங்களில் என்னென்ன சத்துக்கள் உள்ளன இயற்கை உரங்களின் முக்கியத்துவம் இயந்திரக் அரிசியில் என்ன பலகாரம் செய்யலாம் போன்ற தகவல்களும் கண்காட்சியில் விளக்கப்பட்டது. விவசாயத்திற்கு தேவையான நவீன உபகரணங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன. இயற்கை விவசாய முறையில் உருவாகும் தரமான நெல் வகைகள் குறித்து சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் நடத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.