கடந்த 120 ஆண்டுகளில் இல்லா அதிகமான வெப்பம் பதிவு இந்திய வானிலை ஆய்வு மையம்

கடந்த 120 ஆண்டுகளில் அதிகமான வெப்பம்

உலக வெப்பமயமாதலுக்கு மற்றொரு அறிகுறியாக கடந்த 120 ஆண்டுகளில் 2020ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவாகி இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1906 ஆம் ஆண்டிற்கு பின்னர் எட்டாவது ஆண்டாக 2020 ஆம் ஆண்டில் இயல்பைவிட அதிகமாக வெப்பம் பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் கடந்த இரண்டு தசாப்தங்களில் வெப்பநிலை வழக்கத்திற்கு மாறாக முறையை 0.23 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.34 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 1981 ல் இருந்து 2010 வரையான தரவுகளின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் நில மேற்பரப்பு காற்று வெப்பநிலை இயல்பை விட 0.29 டிகிரி செல்சியஸ் அதிகமாக காணப்பட்டது என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 120 ஆண்டுகளில் அதிகமான வெப்பம்

இருப்பினும் கடந்த 2014ஆம் ஆண்டில் பதிவான அதிக அளவு வெப்பத்தை விட கணிசமாக குறைந்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2016ல் 0.71 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவாகியிருந்தது. 2009ல் 0.55, 2017இல் 0.54, 2010இல் 0.39, 2015ல் 0.42 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவானதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் அதிகரித்த வெப்பத்தின் அளவு 0. 24 டிகிரி செல்சியஸில் இருந்து 0.99 டிகிரி செல்சியஸ் ஆகவும் சராசரி வெப்ப அதிகரிப்பு 0.62  டிகிரி செல்சியஸ் ஆகவும் இருந்ததுஎனகுறிப்பிடப்பட்டுள்ளது

1961 இல் இருந்து 2010ஆம் ஆண்டில் தரவுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக இருந்தது என்றும், வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரையிலான மழை பொழிவு அடிப்படையில் இயல்பாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமான வானிலை காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆயிரத்து 565 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என்றும், இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக 815 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *