குஜராத்: சாலையோரம் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் சூரத் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி விபத்துக்குள்ளானதில் சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.தகவலறிந்து விபத்து நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

லாரி ஏறி 15 பேர் உயிரிழப்பு

 

கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டர் வழி விடும் போது லாரி கட்டுப்பாட்டை இழந்தது.  விபத்து ஏற்படுத்திவிட்டு லாரி நிற்காமல் தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விபத்தில் அப்பகுதியில் இருந்த சில இருசக்கர வாகனங்களும் நசிங்கின. சூரத்தில் நடந்த  இந்த விபத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இரண்டு லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் நோநபானி தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *