அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமைச் செயலகத்தில் மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சத்யபிரதா சாகு அரசியல் கட்சியினரை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுக திமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக அரசியல் கட்சியினர் தங்களுடைய ஒவ்வொரு பரப்புரை திட்டம் குறித்து முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறுவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது.