திருச்சி மாவட்டத்தில் டிக்டாக்கில் பழக்கமாகி வீட்டை விட்டு வெளியேறி வந்த பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 20 வயது இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் 2 பேரும் மாணவர் ஒருவரும் கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என அவரது பெற்றோர் தேடிவந்தனர். இவர்களில் ஒரு சிறுமி தனது தாயிடம் செல்போனில் அளித்த தகவலின்படி காவல்துறையினர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மூவரையும் மீட்டர். விசாரணையில் சிறுமிகளில் ஒருவர் டிக் டாக் மூலம் பழக்கமான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியைச் சேர்ந்த மாரிமுத்து என்ற 20 வயது நபரை நம்பி வீட்டை விட்டு சென்றதும் அதற்கு அவரது பள்ளி தோழியும் மற்றொரு மாணவரும் உதவியதும் தெரியவந்தது.
மேலும் மாரிமுத்து கோவையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மூவரும் உதகை மேட்டுப்பாளையத்திலிருந்து உதவி செய்ய முற்பட்ட போது பேருந்தில் ஆதார் அட்டை அல்லது இ பாஸ் வேண்டும் என கேட்டபோது பிடிபட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.