ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் காவல் ஆய்வாளர் ஆன தந்தை தன்னை விட உயர் அதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல்துறையினர் தங்களைவிட உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பது வணக்கம் செய்வது வழக்கமான ஒன்று. அப்படி கடந்த 30 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து பழகியவர் தான் திருப்பதியில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஷியாம் சுந்தர். இந்த இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி கடந்த 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று குண்டூர் நகர காவல்துறை கூடுதல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார். அதன் அடிப்படையில் தந்தையைவிட ஜெஸ்ஸி பிரசாந்தி உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் ஆந்திர மாநில காவல் துறையின் முதல் தற்காலிக காவல் பயிற்சி மற்றும் சாகச நிகழ்ச்சி திருப்பதி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தந்தை மகள் இருவரூம் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். அப்போது டிசிபி சாந்தியை கண்ட அவரது தந்தை சியாம் சுந்தர் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை.
இதுகுறித்து சியாம் சுந்தர் கூறுகையில் முதன் முறையாக நானும் எனது மகளும் ஒரே இடத்தில் பணியாற்றினோம். எனக்கு மேலதிகாரியாக என் மகள் நியமிக்கப்பட்டார். நான் அவரை பார்த்தபோது என் உயர் அதிகாரி என்பதால் அவருக்கு சல்யூட் அடித்தென் என்றார். அப்போது அவரும் மகள் என்ற முறையைக் காட்டிலும் ஒரு போலீஸ் கூடுதல் காவல்துறை ஆணையர் என்ற வீதிகள் அதை ஏற்றுக் கொண்டார் என்றும் உயர் அதிகாரியான எனது மகளுக்கு சல்யுட் அடித்தது என் வாழ்நாளில் நான் பெற்ற மிகவும் நிகழ்ச்சிகரமான சம்பவங்களில் ஒன்று எனவும் தெரிவித்தார். தன்னைவிட உயர் அதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த தந்தையின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.