அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றி அங்கீகாரத்தை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானதால் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற போது அங்கு முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் ஜோ பைடன் அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். நாடாளுமன்றக் கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் அதிரடியாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தனர். இதனிடையே செய்தி சேகரிக்ககுடிருந்த பத்திரிகையாளர்கள் மீது ட்ரம்ப் ஆதரவாளர்கள் கற்களை வீசி தாக்கியதுடன் கேமராக்களை உடைத்து நொறுக்கினர்.
இதனுடைய தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி டிரம்ப் கேட்டுக்கொண்டார் எனினும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனுடைய கலவரத்தை துடியதாக கூறி டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு பன்னிரண்டு மணி நேரம் முடக்கப்பட்டது. பேஸ்புக் இன்ஸ்டாகிராம் கணக்குகலும் மூடப்பட்டன. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜோ பிடென் அமெரிக்க வரலாற்றில் இது கருப்பு நாள் என குறிப்பிட்டு உள்ளார்.