நெருங்கும் கோடை வெயில்: இந்திய வானிலை மையம் முன்னறிவிப்பு!

கோடை வெயில்

 மார்ச்மாதம் தொடங்கி மே மாதம் இறுதி வரை வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து  இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தமிழகம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாதத்திலேயே வெப்பம் சற்று அதிகரித்து காணப்படும் .ஏப்ரல் மே மாதங்களில் வட இந்தியாவில் பல இடங்களில் வெயில்  40 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைக்கும். வெயிலால் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்படுவதும்  தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில்  இந்திய வானிலை ஆய்வு மையம் கோடைகாலத்திற்கான முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஹரியாணா சண்டீகர் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கத்தைவிட அதிக வெப்பம் நிலவ 60 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கர் ஒடிசாவில் வழக்கத்தை விட அதிக வெப்ப நிலை நிலவ 75 சதவிகிதம் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெயில்

 

குஜராத் மஹாராஷ்டிரா கோவா ஆந்திராவிலும் வழக்கத்தைவிட அதிகமான வெப்பம் அதிக வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சாப் உத்தரப் பிரதேசம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வழக்கத்தைவிட 0.5 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பம் பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்தியாவின் வட மாநிலங்கள் மத்திய இந்தியாவின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வடமேற்கு வடகிழக்கு இந்தியாவில் வெப்பம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் தென்னிந்தியாவில் இயல்பை விட குறைவாக பதிவாகும் என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கோடைகால வெப்ப நிலையை விட சற்றே குறைவான வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர 2021 கோடை காலத்தில் கோடை மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *