பறவும் பறவைக் காய்ச்சல்: கோழி, மீன் இறைச்சி விற்பனைக்கு தடை

பறவும் பறவைக் காய்ச்சல்

இமாச்சல பிரதேச மாநிலம் தாங்களா ஆக்ரா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த பறவைகள் உயிரிழந்த நிலையில் கோழி மீன் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வாங் பகுதியில் கடந்த நான்கு தினங்களில் மட்டும் ஆயிரத்து எழுநூற்றுக்கும்  அதிகமான பறவைகள் இருந்துள்ளன. கால்நடை பராமரிப்பு துறை நடத்திய சோதனையில் பறவைக் காய்ச்சல் நோயால் பறவைகள் இறந்தது தெரிய வந்திருக்கிறது. உயிரிழந்த பறவைகளிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க வாங் அணைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஏராளமான காகங்கள் பறவைக் காய்ச்சல் நோயால் உயிரிழந்ததாக மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரின் சித்தரித்திருக்கிறார். இந்த ஒரே 142 பகுதியில் 112 காகங்களும் கடந்த ஒரு வாரத்திற்குள் உயிரிழந்திருப்பதாக தகவல். திருவிழா, ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

பறவும் பறவைக் காய்ச்சல்

12 ஆயிரம் வாத்துக்கள் உயிரிழந்தன. ஆலப்புழா பகுதியில் கால்நடை மருத்துவர்கள் முகாம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழக கேரள எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் பறவை காய்ச்சல் இரண்டு மாவட்டங்களில் வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் கோழி பனைகள் தொடர்ந்து கண்காணிக்கும் படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது அதில் கோழிப் பண்ணைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேரளாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவையினங்கள் மற்றும் முட்டை கோழி தீவனம் பறவையினங்கள் பயன்படுத்தப்படும் உரங்கள் போன்றவற்றை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் திடீரென ஏற்படும் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தலைமை அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *