பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்

பள்ளிகள் திறப்பின்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பள்ளிகளை திறப்பதற்கு  முன்பாக அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வாரத்துக்கு ஆறு நாட்கள் பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் பிற ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மாணவர்கள் அதிகமாக இருந்தால் பல சுற்றுக்களாக பாடங்களை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியில் பள்ளி கல்வித் திட்டமும் தொடர்ந்து நடைபெறும் என்றும் மாணவர்கள் பெற்றோர் அனுமதியுடன் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர விரும்பவில்லை என்றால் வீட்டில் இருந்து ஆன்லைனில் படிக்கலாம் என்றும் வருகைப்பதிவேடு கட்டாயம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பின்

மாணவர்களுக்கு ஜின்க் மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினி தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவிகள் மூலம் அளவீடு செய்ய வேண்டும் என்றும் பள்ளிகளில் அனைத்து கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *