பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து இன்று முதல் புதன்கிழமை வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துளோடு 4 ஆயிரத்து 78 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 10 ஆயிரத்து 278 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று மட்டும் 197 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பிற ஊர்களில் இருந்து இருந்து ஜனவரி 13 வரை 5990 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம், சானடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய கோயம்பேடு பூந்தமல்லி உள்ளிட்ட 13 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. பொங்கல்க்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வர ஏதுவாக ஜனவரி 17, 18, 19 ஆகிய தேதிகளில் ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 15,770 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.