மீண்டும் இனவெறியை தூண்டிய ஆஸி. ரசிகர்கள் தடைப்பட்ட ஆட்டம்!

மீண்டும் இனவெறியை தூண்டிய ஆஸி. ரசிகர்கள்... தடைப்பட்ட ஆட்டம்

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் பேசியதாக ரசிகர்கள் 6 பேர் வெளியேற்றப்பட்டனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. போட்டியின் 4-வது நாளான இன்று இந்திய அணி பந்து வீச்சில் ஈடுபட்டு இருந்தது. அப்போது இந்திய வீரர் முகமது சிராஜ் எல்லை கோட்டின் அருகே பில்டிங்கில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் சிராஜ் பார்த்து இனவெறியை தூண்டும் விதத்திலும் ஆப மதிப்புக்குரிய வார்த்தைகளையும் கூறி விமர்சித்துள்ளனர். போட்டியின் 3-வது நாளான நேற்றும் இதே போன்ற சம்பவம்  நடந்ததை அடுத்து

மீண்டும் இனவெறியை தூண்டிய ஆஸி. ரசிகர்கள்... தடைப்பட்ட ஆட்டம்

 

அது தொடர்பாக பிசிசிஐ சார்பில் போட்டி நடுவரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று முகமது சிராஜ் உட னடியாக கேப்டன் ரகானே இடம் சென்று ரசிகர்கள் இனவெறியுடன் தன்னை அவமதித்து பேசுவதாக புகார் அளித்தார். இதையடுத்து நடுவரிடம் பால் ரீஃபிலிடம் ரகானே புகார் செய்து போட்டியை சில நிமிடங்கள் நிறுத்துமாறு கூறியதை எடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. இந்த தகவல் உடனடியாக மைதான பாதுகாப்பு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அந்த பார்வையாளர் மாடத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பிஎஸ்சிசி அளித்த புகார் குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் பேசியவிதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் கசப்பானதாக அமைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் நாகரீகமான சமூகத்தில் இனவெறிபேச்சு தொடர்கிறது. ஐசிசியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பொறுப்புடன் நடந்து மாற்று வழியை தேட விட்டால் கிரிக்கெட் விளையாட்டு நன்றாக அமையாது எனவும் கூறியுள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *