தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் குமரி கடல் பகுதியில் ஓட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக அடுத்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, புதுக்கோட்டை, சிவகங்கை, டெல்டா மாவட்டங்கள், கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழையும், திருச்சி, மதுரை, விழுப்புரம், அரியலூர்,… Continue reading தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு

அஞ்சல் துறை தேர்வுகள் தமிழிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அஞ்சலக தீர்வுக்கான அறிவிப்பில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையை சார்ந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழ்மொழியில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்தினர். பின்னர் தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்படும் என… Continue reading அஞ்சல்துறை தேர்வு – தமிழ் புறக்கணிப்பு

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சவுரவ் கங்குலி

பிசிசிஐ தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியிருக்கிறார். தற்போது தான் நலமாக இருப்பதாகவும் சிறப்பான சிகிச்சை வழங்கிய தன்னை காத்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார். விரைவில் முழுமையாக குணமடைந்து அன்றாட அலுவல்களுக்கு திரும்புவேன் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று திடீர் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சவுரவ் கங்குலி வீடு… Continue reading மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சவுரவ் கங்குலி

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா? ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால். உண்மையான திராவிடம் முன்னேற்றக் கழகத்திற்கு தலைவராக  இருந்தால் உண்மையா இருந்தால் நேரடியாக வாங்கல் போராட்டத்துக்கு. ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக இன்று முதலமைச்சர் பிரச்சாரம். விவசாயிகள் மற்றும் கைத்தறி தொழில் முனைவோர் உடன் கலந்துரையாடுகிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்றுசட்டப்பேரவை  தேர்தல் குறித்து  விவாதிக்கிறார். அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு… Continue reading ஸ்டாலினுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால்

நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

அமெரிக்காவில் ஜோ பைடன் வெற்றி அங்கீகாரத்தை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் பலியானதால் பதற்றம் நிலவுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகளை ஏற்க அதிபர் டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக டிரம்ப் தொடர்ந்து  குற்றம்சாட்டி வரும் நிலையில் ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்க அமெரிக்காவின் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற போது அங்கு… Continue reading நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

இங்கிலாந்தில் முதல் முறையாக ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உரு மாதிரி பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.   தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவ தொடங்கியதிலிருந்து முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து… Continue reading இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா

நாமக்கல் என பெயர் வைத்த காரணம்? நாமகிரி மலை

இது உங்கள் தொகுதி அறிந்தும் அறியாதது நமது சட்டமன்ற தொகுதியின் சிறப்புகள் அரசியல் முக்கியத்துவம் பற்றி இத் தொகுப்பில் பார்க்கலாம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என காந்தியடிகளின் உப்புச் சத்தியாக்கிரகத்தை பாடலாக முடங்கிய கவிஞரும் சுதந்திர போராட்ட வீரருமான ராமலிங்கம் பிள்ளை பிறந்த நகரம் நாமக்கல். நடுநாயகமாய் வைத்திருக்கும் நாமகிரி என்ற மலையால் நாமக்கல் என்ற நாமம் பெற்றது இந்த ஊர். கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் அளவுக்கு கோழிப்பண்ணை தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறது நாமக்கல் தொகுதி.… Continue reading நாமக்கல் என பெயர் வைத்த காரணம்? நாமகிரி மலை

தன் மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை! நிகழ்ச்சிகரமான சம்பவம்

ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் காவல் ஆய்வாளர் ஆன தந்தை தன்னை விட உயர் அதிகாரியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல்துறையினர் தங்களைவிட உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடிப்பது வணக்கம் செய்வது வழக்கமான ஒன்று. அப்படி கடந்த 30 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து பழகியவர் தான் திருப்பதியில் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஷியாம் சுந்தர். இந்த இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி கடந்த 2018ஆம் ஆண்டு ஐஏஎஸ்… Continue reading தன் மகளுக்கு சல்யூட் அடித்த தந்தை! நிகழ்ச்சிகரமான சம்பவம்

கடந்த 120 ஆண்டுகளில் இல்லா அதிகமான வெப்பம் பதிவு இந்திய வானிலை ஆய்வு மையம்

உலக வெப்பமயமாதலுக்கு மற்றொரு அறிகுறியாக கடந்த 120 ஆண்டுகளில் 2020ஆம் ஆண்டு அதிகமான வெப்பம் பதிவாகி இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 1906 ஆம் ஆண்டிற்கு பின்னர் எட்டாவது ஆண்டாக 2020 ஆம் ஆண்டில் இயல்பைவிட அதிகமாக வெப்பம் பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் 12 ஆண்டுகள் இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும்… Continue reading கடந்த 120 ஆண்டுகளில் இல்லா அதிகமான வெப்பம் பதிவு இந்திய வானிலை ஆய்வு மையம்

பொங்கல் பண்டிகை எதிரொலி வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் கரும்பு அதிகமாக விளைவிக்கப்படும் காட்பாடி, பொய்கை, திருவலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு பணிமுழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அச்சுவெல்லம் , குண்டுவெல்லம் தயாரித்து அதனை கிலோ கணக்கில் அடுக்கி வைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா காரணமாக ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின்போது வெல்லம் விற்பனைச் சரிவடைந்த  நிலையில் தற்போது அதிக ஆர்டர் கிடைத்துள்ளதால்… Continue reading பொங்கல் பண்டிகை எதிரொலி வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்