பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  பள்ளிகளை திறப்பதற்கு  முன்பாக அனைத்து வகுப்புகளிலும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் வாரத்துக்கு ஆறு நாட்கள் பள்ளிகளை நடத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் அதிகபட்சமாக 25 மாணவர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அமர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் பிற ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மாணவர்கள் அதிகமாக… Continue reading பள்ளிகள் திறப்பின் போது பின்பற்ற வேண்டிய முக்கிய விதிமுறைகள்

ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன் அதிரடி

ரிலையன்ஸ் மற்றும் ஜியோ க்கு போட்டியாக ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்திற்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளனர். தொலைதொடர்பு துறையில் ரிலையன்ஸ், ஜியோ வின் வருகையால் முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. ஜியோவின் போட்டியில் சமாளிக்க முடியாமல் திணறி வந்த நிறுவனங்கள் பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்தனர். இதனிடையே ஜியோவின் அதிரடி சலுகை நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறினர். இதனால் கலக்கமடைந்த நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள… Continue reading ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல், வோடபோன் அதிரடி

பறவும் பறவைக் காய்ச்சல்: கோழி, மீன் இறைச்சி விற்பனைக்கு தடை

இமாச்சல பிரதேச மாநிலம் தாங்களா ஆக்ரா மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த பறவைகள் உயிரிழந்த நிலையில் கோழி மீன் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வாங் பகுதியில் கடந்த நான்கு தினங்களில் மட்டும் ஆயிரத்து எழுநூற்றுக்கும்  அதிகமான பறவைகள் இருந்துள்ளன. கால்நடை பராமரிப்பு துறை நடத்திய சோதனையில் பறவைக் காய்ச்சல் நோயால் பறவைகள் இறந்தது தெரிய வந்திருக்கிறது. உயிரிழந்த பறவைகளிடமிருந்து நோய் பரவாமல் தடுக்க வாங் அணைப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் ஏராளமான… Continue reading பறவும் பறவைக் காய்ச்சல்: கோழி, மீன் இறைச்சி விற்பனைக்கு தடை

இயற்கை உணவுத் திருவிழா 2021

பட்டம் பார்த்து பயிர் செய் என்று சொல்வார்கள். பார்த்து பார்த்து பயிரிடப்படும் நெல் வகைகளில் எத்தனை ரகங்கள் இருக்கின்றன என்று தெரியுமா. கும்பகோணத்தில் நடந்த இயற்கை உணவு திருவிழா பற்றி பார்க்கலாம். சொத்து போல் விதையை பேனா வேண்டும் என்பது மூத்தோர் சொல். அதற்கு ஏற்ப விதைகளை விவசாயிகள் குழந்தை போல பாதுகாத்து வருகின்றனர். நாம் அன்றாட உண்ணும் அரிசிக்கள் எந்த வகை நெல்லில் இருந்து வருகிறது என்று அறிந்தவர்கள் மிக சொற்பமே. அனைவரும் இதை அறிந்து… Continue reading இயற்கை உணவுத் திருவிழா 2021

அமெரிக்காவில் வெளியாகி டிரம்ப் பேசும் ரகசிய ஆடியோ டேப்

ஜார்ஜியா மாநிலத்தில் தான் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவிக்கும் வகையில் கள்ள வாக்குகளை ஏற்பாடு செய்யுமாறு அதிபர் டிரம்ப் பேசும் ஆடியோ டேப் வெளியாகி அமெரிக்காவில் அனலை பற்றவைத்துள்ளது. ஜார்ஜியா 11779 வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடனிடம் தோற்றதால் டிரம்ப் அந்த மாநிலத்தின் தேர்தல் வாக்குகளையும் இழந்தார். இந்த நிலையில் ஜார்ஜியா மாநில அமைச்சர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசி டிரம்ப் 11780 வாக்குகளை தயார் செய்து தாம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் ஏற்பாடு செய்யுமாறு கேட்பது போன்று… Continue reading அமெரிக்காவில் வெளியாகி டிரம்ப் பேசும் ரகசிய ஆடியோ டேப்

இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (04.01.2021)

சிவகங்கையில் மினி கிளினிக் திறப்பு விழா சிவகங்கையில் மினி கிளினிக் திறப்பு விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனின் அனாகரிக செயலால் சலசலப்பு ஏற்பட்டது. முதலமைச்சரின் அம்மா மினிகிளினிக் திறப்பு நிகழ்ச்சியில் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார். விழா மேடையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணி பாஸ்கரன் பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன் அநாகரிகமாக பேசியுள்ளார். மேலும் திமுகவினர் ஒன்றுகூடி அமைச்சர்கள்  மற்றும் அதிமுகவினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு… Continue reading இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (04.01.2021)

இன்றைய தலைப்புச் செய்திகள் (04.01.2021)

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் பானர்ஜி இன்று பதவி ஏற்கிறார். இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த எ.பி.ஈசாக்கின் பணி காலம் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன்முடிவடைந்ததால் ஓய்வு பெற்றார். இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் பேனர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்ததற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஒன்பது… Continue reading இன்றைய தலைப்புச் செய்திகள் (04.01.2021)