இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (04.01.2021)

சிவகங்கையில் மினி கிளினிக் திறப்பு விழா சிவகங்கையில் மினி கிளினிக் திறப்பு விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பனின் அனாகரிக செயலால் சலசலப்பு ஏற்பட்டது. முதலமைச்சரின் அம்மா மினிகிளினிக் திறப்பு நிகழ்ச்சியில் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார். விழா மேடையில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணி பாஸ்கரன் பேசிக்கொண்டிருந்தபோது நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் பெரியகருப்பன் அநாகரிகமாக பேசியுள்ளார். மேலும் திமுகவினர் ஒன்றுகூடி அமைச்சர்கள்  மற்றும் அதிமுகவினர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு… Continue reading இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் (04.01.2021)

இன்றைய தலைப்புச் செய்திகள் (04.01.2021)

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் பானர்ஜி இன்று பதவி ஏற்கிறார். இதுவரை தலைமை நீதிபதியாக இருந்த எ.பி.ஈசாக்கின் பணி காலம் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன்முடிவடைந்ததால் ஓய்வு பெற்றார். இதனிடையே கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சஞ்சய் பேனர்ஜியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்ததற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று காலை ஒன்பது… Continue reading இன்றைய தலைப்புச் செய்திகள் (04.01.2021)